கொழும்பின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இன்று (19.10) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (21.10) மாலை 05.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22.10) காலை 08.00 மணி வரை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.