அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முக்கிய போட்டி ஆரம்பம்

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முக்கிய போட்டி ஆரம்பம்

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 18 ஆவது போட்டி இந்தியா, பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இரண்டு பலமான அணிகள் மோதும் இந்தப் போட்டி விறு விறுப்பாக அமையுமென எதிர்பார்க்கபப்டுகிறது. அரை இறுதிப் போட்டி நகர இரு அணிகளுக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாக அமைகிறது.

1999 ஆண்டின் உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டி அணிகள் இரண்டும் இதுவரை 10 தடவைகள் உலகக்கிண்ண தொடரில் சந்தித்துள்ளன. இவற்றில் 6 போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியும், 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்கஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ்,மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
நியூசிலாந்து04040000081.923
இந்தியா04040000081.659
தென்னாபிரிக்கா03020100041.385
பாகிஸ்தான்0302010004-0.137
இங்கிலாந்து0301020002-0.084
அவுஸ்திரேலியா0301020002-0.734
பங்களாதேஷ்0401030002-0.784
நெதர்லாந்து0301020002-0.993
ஆப்கானிஸ்தான்0401030002-1.250
இலங்கை0300030000-1.532

Social Share

Leave a Reply