வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (20.10) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு மாகாணங்களில் புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கும், மைலத்தமடுவில் தமிழ் விவசாயிகள் பயன்படுத்திய காணிகளை சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவலும் குறித்த ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பாடசாலை தவணை பரீட்சை நடைபெறுவதால் கல்வி நடவடிக்கை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அரசு நிறுவனங்களும் வழமை போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்த்தால் காரணமாக வவுனியாவில் கடைகள் மூடப்பட்டிருந்த போதிலும் ஏனைய அனைத்து சேவைகளும் வழமை போன்று இயங்கி வருகின்றன.