பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் 18 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தியா, பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 368 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை துரத்தி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி பெற்ற ஆரம்பம் போன்று பாகிஸ்தானின் ஆரம்பம் அமைந்த போதும் அவுஸ்திரேலியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை பெற முடியவில்லை. 134 ஓட்டங்கள் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம். அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக் ஆகியோர் இந்த ஆரம்பத்தை பெற்றனர். இருவரும் ஆட்டமிழந்த பின்னர் பாகிஸ்தான் அணிக்கு சரியான இணைப்பாட்டங்கள் அமையவில்லை. பாகிஸ்தான் அணியின் தலைவரும், தரப்படுத்தலில் முதலிட வீரருமான பாபர் அஸாம் உலகக்கிண்ண தொடரில் பிரகாசிக்க தவறி வருகின்றமை பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியா அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆரம் ஆரம்ப விக்கெட்களை முறியடித்து விக்கெட்களை தகர்த்து தகர்த்தார். அதன் பின்னர் அடம் ஷம்பா தனது கைவரிசையை காட்டி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி அதிரடியான ஆரம்பம் ஒன்றை பெற்று பலமான நிலைக்கு சென்றது. டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ் இருவரும் சதங்களை பூர்த்தி செய்தனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 33.5 ஓவர்களில் 259 ஓட்டங்கள். இதற்கு பிறகு அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் பேசவா வேண்டும். டேவிட் வோர்னர் 163 ஓட்டங்கள். அணி 325 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். மார்ஷ் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. இருப்பினும் ஓட்டங்கள் உயர்ந்து சென்றன. ஆரம்பத்தில் வோர்னர் 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அவரின் மிக இலகுவான பிடி நழுவவிட்டது பாகிஸ்தானின் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 367 ஓட்டங்களை பெற்றது. இந்த இலக்கை பாகிஸ்தான் அணி துரதியடிப்பது இலகுவானதல்ல. ஷஹீன் ஷா அப்ரிடி அவுஸ்திரேலியா அணியின் விக்கெட்களை தகர்த்து ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த உதவினார். அவர் 5 விக்கெட்ளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளோடு ஐந்தாமிடத்துக்கு பின் சென்றுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா  ஷபீக்பிடி –க்ளன் மக்ஸ்வெல்மார்கஸ் ஸ்ரோய்னிஸ்646172
இமாம் உல் ஹக்பிடி –மிட்செல் ஸ்டார்க்மார்கஸ் ஸ்ரோய்னிஸ்7071100
பபர் அசாம்பிடி –பட் கம்மின்ஸ்அடம் ஷம்பா  181430
மொஹமட்  ரிஸ்வான்L.B.Wஅடம் ஷம்பா  464050
சவுத் ஷகீல்பிடி –மார்கஸ் ஸ்ரோய்னிஸ்பட் கம்மின்ஸ்303150
இப்திகார் அகமட்L.B.Wஅடம் ஷம்பா  262003
மொஹமட் நவாஸ்St. ஜோஷ் இங்கிலிஸ்அடம் ஷம்பா  141601
உசாமா மிர்பிடி –மிட்செல் ஸ்டார்க்ஜோஸ் ஹெஸல்வூட்000300
ஹசன் அலிபிடி –ஜோஷ் இங்கிலிஸ்மிட்செல் ஸ்டார்க்080820
ஷஹீன் அப்ரிடி.பிடி – மார்கஸ் லபுஷேன்பட் கம்மின்ஸ்100820
ஹரிஸ் ரவூப்  000100
உதிரிகள்  19   
ஓவர்  45.3விக்கெட்  10மொத்தம்305   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்08006501
ஜோஸ் ஹெஸல்வூட்10013701
பட் கம்மின்ஸ்7.3006202
அடம் ஷம்பா  10005304
க்ளன் மக்ஸ்வெல்05004000
மார்கஸ் ஸ்ரோய்னிஸ்05004002
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டேவிட் வோர்னர்பிடி – ஷதாப் கான்ஹரிஸ் ரவூப்163124149
மிற்செல் மார்ஷ்பிடி – உசாமா மிர்ஷஹீன் அப்ரிடி121108109
க்ளன் மக்ஸ்வெல்பிடி – பபர் அசாம்ஷஹீன் அப்ரிடி000100
ஸ்டீபன் ஸ்மித்பிடி – உசாமா மிர்உசாமா மிர்070900
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ்L.B.Wஷஹீன் அப்ரிடி212411
ஜோஷ் இங்லிஷ்பிடி – முகமட் ரிஸ்வான்ஹரிஸ் ரவூப்130920
மார்னஸ் லபுஷேன்பிடி – ஷதாப் கான்ஹரிஸ் ரவூப்081210
பட் கம்மின்ஸ்  060800
மிட்செல் ஸ்டார்க்பிடி – சவுத் ஷகீல்ஷஹீன் அப்ரிடி020300
ஜோஸ் ஹெஸல்வூட்பிடி – முகமட் ரிஸ்வான்ஷஹீன் அப்ரிடி000100
அடம் ஷம்பா  010100
உதிரிகள்  25   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்367   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷஹீன் அப்ரிடி10015405
ஹசன் அலி08005700
இப்திகார் அகமட்08003700
ஹரிஸ் ரவூப்08008303
உசாமா மிர்09008201
மொஹமட் நவாஸ்07004300
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
நியூசிலாந்து04040000081.923
இந்தியா04040000081.659
தென்னாபிரிக்கா03020100041.385
அவுஸ்திரேலியா0402020004-0.193
பாகிஸ்தான்0402020004-0.456
இங்கிலாந்து0301020002-0.084
பங்களாதேஷ்0401030002-0.784
நெதர்லாந்து0301020002-0.993
ஆப்கானிஸ்தான்0401030002-1.250
இலங்கை0300030000-1.532

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்கஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் ,மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version