இலங்கை பாரளுமன்றத்தில் நேற்று(20.10) இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கைகலப்பில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஓத்தி வைக்கப்பட்து. அதன் பின்னர் சபாநாயர்க் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய உப சபாநாயகர் தலைமையில் குழு ஒன்றை நியமனம் செய்துள்ளார்.
இவ்வாறன நிலையில் நேற்று இரவு கொழும்பு, ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுன்றத்தில் நடைபெற்ற தாக்குதலில் காயமடிந்ததாக தெரிவித்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பாரளுமன்றத்தில் டயானா கமகே மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.