நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்திய இந்தியா.

நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்திய இந்தியா.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டி தரம்ஷலாவில் நடைபெற்று வருகிறது. முதலிரு அணிகளுக்கான போட்டியாக இது அமைவதனால் விறு விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி 274 எனும் ஓட்ட இலக்கை இந்தியா அணிக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஓட்ட இலக்கை இந்தியா துரதியடிக்கும் என்ற நம்பிக்கையோடு பலர் காத்திருக்கின்றனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தது. அதன் மூலமாக நியுசிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் ரச்சின் ரவீந்த்ர, டெரில் மிற்செல் ஆகியோர் இணைந்து மீட்டு எடுத்தனர். ரவீந்தர் ஜடேஜா தவறவிட்ட இலகுவான பிடி இந்த ஜோடிக்கு வாய்ப்பாக அமைந்தது. ரச்சின் 12 ஓட்டங்களை பெற்ற வேளையில் மொஹமட் ஷமியின் பதினோராவது ஓவர் பந்துவீச்சில் பிடி நழுவவிடப்பட்டது. இரண்டு தடவைகள் ரச்சின் ரவீந்திரவுக்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டு மீள் பரிசீலனை மூலம் அவர் தப்பித்துக் கொண்டார்.

விக்கெட் கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குல்தீப் யாதவின் 32.5 ஆவது ஓவரில் டெரில் மிற்செலின் பிடியை மொஹமட் ஷிராஜ் நழுவவிட்டார். இந்தப் பிடிகள் இரண்டும் இந்தியா அணிக்கு போட்டியில் தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் 4 பந்துகளில் மொஹமட் ஷமி ரச்சினின் விக்கெட்டை கைப்பற்றி 149 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்தார். சிறிய இடைவெளியில் அணியின் தலைவர் ரொம் லெதாமின் விக்கெட் வீழ்த்தப்பட இந்தியா ஓரளவு கட்டுப்படுத்தியது. இருப்பினும் டெரில் மிற்செல் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை போராடி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக் கொடுத்தார்.

இந்தியா அணியின் இறுதி நேரப்பந்துவீச்சு நியுசிலாந்து அணியின் எதிர்பார்க்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையிலும் குறைவாக கட்டுப்படுத்த உதவியுள்ளது.

நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுள்ளது. நான்கு போட்டிகளின் பின்னர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மொஹமட் ஷமி அபாரமாக பந்துவீசி நியூசிலாந்து அணிக்கு தலையிடி வழங்கியுள்ளார். தனது இரண்டாவது ஐந்து விக்கெட் பெறுதியை பெற்றுக்கொண்டார்.

ரச்சின் ரவீந்திர தொடர்ச்சியான சிறந்த துடுப்பாட்டம் மூலம் யாரும் எதிர்பாராத நிலையில் பிரபலம் அடைந்துள்ளார்.

குல்தீப் யாதவின் பந்துவீச்சு அடித்து தாக்கப்பட மேலதிக பந்துவீச்சாளர் இல்லாமல் போனது இந்தியா அணிக்கு பின்னடைவாக போனது.

ஹார்டிக் பாண்டியாக்கு காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்த்துக் கொள்ளப்பட்டுளளார். ஷர்டூல் தாகூர் நீக்கப்பட்டு மொஹமட் ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.

இரு அணிகளும் தலா 04 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுமணி அரை இறுதிப்போட்டிக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதன் காரணமாக இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுமென நம்பலாம்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டெவோன் கொன்வேபிடி-ஷ்ரேயாஸ் ஐயர்மொஹமட் சிராஜ்000900
வில் ஜங்Bowledமொஹமட் ஷமி172730
ரச்சின் ரவீந்திரபிடி- சுப்மன் கில்மொஹமட் ஷமி758761
டெரில் மிட்செல்பிடி – விராத் கோலிமொஹமட் ஷமி13012795
ரொம் லெதாம்L.B.Wகுல்தீப் யாதவ்050710
கிளென் பிலிப்ஸ்பிடி – ரோஹித் ஷர்மாகுல்தீப் யாதவ்232601
மார்க் சப்மன்பிடி – விராத் கோலிஜஸ்பிரிட் பும்ரா060800
மிட்செல் சென்ட்னர்Bowledமொஹமட் ஷமி010200
மட் ஹென்றிBowledமொஹமட் ஷமி000100
லூக்கி பெர்குசன் Run Out  01 05 0
 டிரென்ட் போல்ட்   00 01 0 0
உதிரிகள்  15   
ஓவர்  50விக்கெட்  10மொத்தம்273   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்விக்
ஜஸ்பிரிட் பும்ரா10014501
மொஹமட் சிராஜ்10014501
மொஹமட் ஷமி10005405
ரவீந்தர் ஜடேஜா10004800
குல்தீப் யாதவ்10007302

அணி விபரம்

நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version