இலங்கை வளர்முக அணி தொடரை வென்றது

இலங்கை வளர்முக மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை வளர்முக அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 223 ஓட்டங்களை
பெற்றது. இதில் ஷஹதத் ஹொசைன் 79(75) ஓட்டங்களையும், மஹ்முதுல் ஹசன் ஜொய் 37(36) ஓட்டங்களையும், பிரிட்டொன் குமார் 35(51) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சமிந்து விக்ரமசிங்க அஷியன் டானியல் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், வியாஸ்காந்த், நிபுண் பிரேமரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி முதல் விக்கெட்டை வேகமாக இழந்தது. ஷெவோன் டானியல்,
பவன் ரத்னாயக்க ஆகியோர் 81 ஓட்டங்களை இணைப்படாமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தனர். இலங்கை அணி 31.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது. இதில் பவன் ரத்னாயக்க 85(56) ஓட்டங்களையும், நவோத் பரணவிதான 47(56) ஓட்டங்களையும், அஹான் விக்ரமசிங்க 30(25) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிப்பொன் மொன்டொல் 3 விக்கெட்களையும், ரிஷாட் ஹொசைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version