
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (23.10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
பாகிஸ்தான் அணிக்காக இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக் ஆகியோர் இருவரும் 56 ஓட்டங்களை முதல் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இமாம் உல் ஹக் இந்த தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பௌன்சர் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார். இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தவுடன் அப்துல்லா ஷபிக், பபர் அசாம் ஆகியோர் 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார். மொஹமட் ரிஷ்வான் ஒரு 6 ஓட்டங்களை பெற்றுவிட்டு ஆட்டமிழந்தார். பபர் அசாம் நிதானமாக துடுப்பாடி அவரது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். நூர் அஹமட் பாகிஸ்தான் அணியின் முக்கியமான விக்கெட்களை தகர்த்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த உதவினார். ஷதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் அதிரடி நிகழ்த்தி இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
பெற்றுள்ள இந்த ஓட்ட எண்ணிக்கையை ஆப்கானிஸ்தான் பெறுவது கடினம் என கூறவியலாது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு இறுக்கமாக அமையாவிட்டால் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் காணப்படுகின்றன.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபீக் | L.B.W | நூர் அஹமட் | 58 | 75 | 5 | 2 |
| இமாம் உல் ஹக் | பிடி – நவீன் உல் ஹக் | அஸ்மதுல்லா ஓமர்சாய் | 17 | 22 | 2 | 0 |
| பபர் அசாம் | பிடி – மொஹமட் நபி | நூர் அஹமட் | 74 | 92 | 4 | 1 |
| மொஹமட் ரிஸ்வான் | பிடி – முஜீப் உர் ரஹ்மான் | நூர் அஹமட் | 08 | 10 | 0 | 1 |
| சவுத் ஷகீல் | பிடி – ரஷீட் கான் | மொஹமட் நபி | 25 | 34 | 3 | 0 |
| ஷதாப் கான் | பிடி – மொஹமட் நபி | நவீன் உல் ஹக் | 40 | 38 | 1 | 1 |
| இப்திகார் அகமட் | பிடி – அஸ்மதுல்லா ஓமர்சாய் | நவீன் உல் ஹக் | 40 | 27 | 2 | 4 |
| ஷஹீன் அப்ரிடி | 03 | 03 | 0 | 0 | ||
| ஹசன் அலி | ||||||
| உசாமா மிர் | ||||||
| ஹரிஸ் ரவூப் | ||||||
| உதிரிகள் | 17 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 07 | மொத்தம் | 282 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நவீன் உல் ஹக் | 07 | 00 | 52 | 02 |
| முஜீப் உர் ரஹ்மான் | 08 | 00 | 55 | 00 |
| மொஹமட் நபி | 10 | 00 | 31 | 01 |
| அஸ்மதுல்லா ஓமர்சாய் | 05 | 00 | 50 | 01 |
| ரஷீட் கான் | 10 | 00 | 41 | 00 |
| நூர் அஹமட் | 10 | 00 | 43 | 03 |
இந்த உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வியினை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வி என்ற நிலையில் காணப்படுகிறது.
பாகிஸ்தான் அணி அரை இறுதிக்க்கு செல்வதற்கு இன்றைய போட்டி மிக முக்கியமாக அமைந்துள்ள வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்.
இரு அணிகளும் ஒவ்வொரு மாற்றங்கலுடன் விளையாடுகின்றன. பாகிஸ்தான் அணி மொஹமட் நவாஸிற்கு பதிலாக ஷதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி பஷால்ஹக் பரூக்கியிற்கு பதிலாக நூர் அஹமட் விளையாடுகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் 4 சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடுகிறார்கள்.
அணி விபரம்
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்