வடகிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பங்களாதேஷின் நனேஹிரா பைரப் நகரிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பங்களாதேஷ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.