ஆசிரியர்-அதிபரின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகம்!

புறக்கோட்டையில் இடம்பெறும் ஆசிரியர்-அதிபரின் எதிர்ப்பு பேரணி கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டுள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் புத்ததாச மைதானத்திற்கு அருகில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தின் மீதே கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

​​போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், சாலை தடுப்புகளை உடைத்து, முன்னேற நினைத்ததால் இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சந்தியை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version