ஈஸ்டர் தாக்குதல் – பகிரங்க விவாதத்திற்கு ஹரின் MP அழைப்பு

தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்ததாக சஹ்ரான் ஹாஷpமின் மனைவி சதியா ஒப்புக்கொண்ட ஓடியோ கிளிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (11/11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வத்திக்கானில் உள்ளவர்கள் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் கூட இன்று வரை அந்த கிளிப்களை கேட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் கூறினார்.

‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தனது கணவர் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி சதியா ஒப்புக்கொண்ட கிளிப்புகள் கிடைக்கின்றன, கர்தினால் ரஞ்சித்தும் வத்திக்கானில் உள்ளவர்களும் அதை ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போது அது எங்குள்ளது என்பதை நான் வெளியிட மாட்டேன்’ என ஹரின் ஆP கூறினார்.

அதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் பகிரங்க விவாதம் நடத்த தயாராக இருப்பதாக ஹரின் MP மீண்டும் சவால் விடுத்தார்.

‘கைது செய்யப்படுவதை கண்டு நான் அஞ்சவில்லை அதனால் தான் அமைச்சர் வீரசேகரவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version