​​இஸ்ரேயலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

வீசா காலாவதியான பின்னரும் இஸ்ரேயலில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களின் வீசாக்களை புதுப்பிக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உணவு உற்பத்தி, சேமிப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற விவசாயத் துறையில் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்றும் (24.10) நாளையும் (25.10) தகவல் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது இஸ்ரேலில் விசா இன்றி இருக்கும் இலங்கையர்கள் தங்கள் தகவல்களை வழங்குமாறும் அவர்கள் கடவுச்சீட்டை எடுத்து அதன் நகலை தூதரகத்தில் கொடுத்து பதிவு செய்யுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply