
பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடயில் உலககிண்ணத்தொடரின் 23 போட்டி மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து சிறந்த அதிரடி துடுப்பாட்டம் மூலம் பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது. 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 382 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றுள்ளது. மூன்றாவது தடவையாக 350 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
ஆரம்ப இரண்டு விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட நிலையில் குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ராம் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி அணியை மீட்டு சிறந்த நிலைக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடிய குயின்டன் டி கொக் சதத்தை பூர்த்தி செய்தார்.இந்த உலகக்கிண்ண தொடரில் இது அவரின் மூன்றாவது சதமாகும். சதம் பூர்த்தி செய்த பின்னர் அதிரடியாக துடுப்பப்படி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். ஹென்றிச் க்ளாஸான் அதிரடியாக துடுப்பாடினார்.
க்ளாஸான் மற்றும் டேவிட் மில்லர் 20 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்று இந்த உலகக்கிண்ணத்தின் வேகமான அரைச்சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர்.
பங்களாதேஷ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி 3 போட்டிகளில் தோல்வி என்னும் நிலைமையில் ஏழாமிடத்திலும் தென்னாபிரிக்கா அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 1 தோல்வியை சந்தித்து மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| குயின்டன் டி கொக் | பிடி –நசும் அஹமட் | ஹசன் மஹ்முட் | 174 | 140 | 15 | 7 |
| ரீஷா ஹென்றிக்ஸ் | Bowled | ஷொரிபுல் இஸ்லாம் | 12 | 19 | 1 | 0 |
| ரஷி வன் டேர் டுசென் | L.B.W | மெஹிதி ஹசன் மிராஸ் | 01 | 07 | 0 | 0 |
| எய்டன் மார்க்ரம் | பிடி –லிட்டொன் டாஸ் | ஷகிப் அல் ஹசன் | 60 | 69 | 7 | 0 |
| ஹெய்ன்ரிச் கிளாசன் | பிடி – மஹ்மதுல்லா | ஹசன் மஹ்முட் | 90 | 49 | 2 | 8 |
| டேவிட் மில்லர் | 34 | 15 | 1 | 4 | ||
| மார்கோ ஜன்சன் | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 05 | மொத்தம் | 382 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| முஸ்ரபைசூர் ரஹ்மான் | 09 | 00 | 76 | 00 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | 09 | 00 | 44 | 00 |
| ஷொரிபுல் இஸ்லாம் | 09 | 00 | 76 | 01 |
| ஷகிப் அல் ஹசன் | 09 | 00 | 69 | 01 |
| ஹசன் மஹ்முட் | 06 | 00 | 67 | 02 |
| நசும் அஹமட் | 05 | 00 | 27 | 00 |
| மஹ்மதுல்லா | 03 | 00 | 20 | 00 |
அணி விபரம்
பங்காளதேஷ் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(தலைவர்), லிட்டொன் டாஸ், ஹசன் மஹ்முட் , ரன்ஷித் ஹசன், தௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, நசும் அஹமட் , முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்
தென்னாபிரிக்கா அணி: ரீஷா ஹென்றிக்ஸ் குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம்(தலைவர்), டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி