எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு!

கடும் மழை காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய பிரதான வீதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல இடங்களில் வீதியின் ஒரு பாதை மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும், வீதி திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எல்ல-வெல்லவாய வீதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் பகுதியாக இருப்பதால், ஆபத்தான இடங்களில் நின்று உணவு உற்கொள்ளவது, அழகை ரசிப்பது மற்றும் புகைப்படம் எடுப்பது ஆபத்தானது எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version