
அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி உலககிண்ணத்தொடரின் 24 ஆவது போட்டியாக இன்று (25.10) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அவுஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் இணைப்பாட்டம் சத இணைப்பாட்டத்தை தாண்டியது. இருவரும் 138 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்ததும், ஜோடி சேர்ந்த டேவிட் வோர்னர், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். மார்னஸ் லபுஷேன் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் சம இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. டேவிட் வோர்னர் சிறப்பாக துடுப்பாடி அவரது 22 ஆவது சதத்தையும், இந்த உலககிண்ணத்தொடரில் இரண்டாவது சதத்தையும் பூர்த்தி செய்தார். நெதர்லாந்து அணி இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைத் தகர்த்ததனாலும், அபாரமான களத்தடுப்பினாலும் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியிருந்தாலும் க்ளன் மக்ஸ்வெல் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயாத்திக்கொடுத்ததுடன் அவரது மூன்றாவது ஆவது சதத்தை 40 பந்துகளில் பூர்த்தி செய்து உலககிண்ணத்தில் வேகமாக அடிக்கப்பட்ட சதம் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த உலககிண்ணத்தில் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் அடித்த சத சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்திரேலியா அணி 400 ஓட்டங்களை பெறும் வாய்ப்பை 1 ஓட்டத்தால் தவற விட்டிருந்தனர்.
அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றது.
இந்த இலக்கை நெதர்லாந்து அணி துரத்தியடிப்பது கடினமானதாகும்.
நெதர்லாந்து அணியின் ஆரம்ப விக்கெட் வீழ்த்தப்பட்டவுடன் விக்கெட்கள் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. நெதர்லாந்து அணியில் எல்லோரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. அவுஸ்திரேலியா அணி அதிரடியான துடுப்பாட்டம், ஆக்ரோஷமான பந்துவீச்சு, அபாரமான களத்தடுப்பு என்பவற்றாலேயே இந்த வெற்றி கிடைத்தது. அவுஸ்திரேலியா அணி இன்று வெற்றி பெற்றிருந்தாலும் புள்ளிபட்டியலில் அதே இடத்திலேயே காணப்படும். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்பன அவர்களுக்கு இன்று சிறப்பாக அமையவில்லை. அவுஸ்திரேலியா அணியில் எல்லோரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அடம் ஷம்பா சிறப்பாக பந்துவீசி நெதர்லாந்து அணியின் முக்கியமான விக்கெட்களை தகர்த்து அவுஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொள்ள உதவினார்.
நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| விக்ரம் சிங் | Run Out | 25 | 25 | 6 | 0 | |
| மக்ஸ் ஓ டொவ்ட் | Bowled | மிட்செல் ஸ்டார்க் | 06 | 09 | 1 | 0 |
| கொலின் அக்கர்மன் | L.B.W | ஜோஸ் ஹெஸல்வூட் | 10 | 11 | 2 | 0 |
| சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | பிடி – டேவிட் வோர்னர் | மிற்செல் மார்ஷ் | 11 | 21 | 1 | 0 |
| பஸ் டி லீட் | L.B.W | பட் கம்மின்ஸ் | 04 | 07 | 1 | 0 |
| ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | 10 | 20 | 0 | 0 | ||
| தேஜா நிடமனுரு | பிடி – ஜோஷ் இங்கிலிஸ் | மிற்செல் மார்ஷ் | 14 | 18 | 2 | 0 |
| லோகன் வன் பீக் | பிடி – ஜோஷ் இங்கிலிஸ் | அடம் ஷம்பா | 00 | 03 | 0 | 0 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | L.B.W | அடம் ஷம்பா | 00 | 01 | 0 | 0 |
| ஆர்யன் டட் | L.B.W | அடம் ஷம்பா | 01 | 08 | 0 | 0 |
| போல் வன் மீகெரென் | Stump – ஜோஷ் இங்கிலிஸ் | அடம் ஷம்பா | 00 | 01 | 0 | 0 |
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 21 | விக்கெட் 10 | மொத்தம் | 90 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| மிட்செல் ஸ்டார்க் | 04 | 00 | 22 | 01 |
| ஜோஸ் ஹெஸல்வூட் | 06 | 00 | 27 | 01 |
| பட் கம்மின்ஸ் | 04 | 00 | 14 | 01 |
| மிற்செல் மார்ஷ் | 04 | 00 | 19 | 02 |
| அடம் ஷம்பா | 03 | 00 | 08 | 04 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| மிற்செல் மார்ஷ் | பிடி – கொலின் அக்கர்மன் | லோகன் வன் பீக் | 09 | 15 | 2 | 0 |
| டேவிட் வோர்னர் | பிடி – ஆர்யன் டட் | லோகன் வன் பீக் | 104 | 93 | 11 | 3 |
| ஸ்டீவன் ஸ்மித் | பிடி – ரோலோஃப் வன் டெர் மேர்வ் | ஆர்யன் டட் | 71 | 68 | 9 | 1 |
| மார்னஸ் லபுஷேன் | பிடி – ஆர்யன் டட் | பஸ் ட லீடா | 62 | 47 | 7 | 2 |
| ஜோஷ் இங்லிஷ் | பிடி – சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | பஸ் ட லீடா | 14 | 12 | 1 | 1 |
| க்ளன் மக்ஸ்வெல் | பிடி – சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | லோகன் வன் பீக் | 106 | 44 | 9 | 8 |
| கமரூன் கிரீன் | Run Out | 08 | 11 | 1 | 0 | |
| பட் கம்மின்ஸ் | 12 | 09 | 0 | 0 | ||
| மிட்செல் ஸ்டார்க் | பிடி – கொலின் அக்கர்மன் | லோகன் வன் பீக் | 00 | 01 | 0 | 0 |
| அடம் ஷம்பா | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 09 | மொத்தம் | 399 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஆர்யன் டட் | 07 | 00 | 59 | 01 |
| கொலின் அக்கர்மன் | 04 | 00 | 19 | 00 |
| லோகன் வன் பீக் | 10 | 00 | 74 | 04 |
| போல் வன் மீகெரென் | 10 | 00 | 64 | 00 |
| விக்ரம் சிங் | 04 | 00 | 27 | 00 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 05 | 00 | 41 | 00 |
| பஸ் ட லீடா | 10 | 00 | 115 | 02 |
புள்ளிப்பட்டியல்
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| இந்தியா | 05 | 05 | 00 | 00 | 10 | 1.353 |
| தென்னாபிரிக்கா | 05 | 04 | 01 | 00 | 08 | 2.370 |
| நியூசிலாந்து | 05 | 04 | 01 | 00 | 08 | 1.481 |
| அவுஸ்திரேலியா | 05 | 03 | 02 | 00 | 06 | 1.142 |
| பாகிஸ்தான் | 05 | 02 | 03 | 00 | 04 | -0.456 |
| ஆப்கானிஸ்தான் | 05 | 02 | 03 | 00 | 04 | -1.250 |
| இலங்கை | 04 | 01 | 03 | 00 | 02 | -1.048 |
| இங்கிலாந்து | 04 | 01 | 02 | 00 | 02 | -1.248 |
| பங்களாதேஷ் | 05 | 01 | 04 | 00 | 02 | -1.253 |
| நெதர்லாந்து | 05 | 01 | 04 | 00 | 02 | -1.902 |
அவுஸ்திரேலியா அணி ஒரு மாற்றத்தோடு விளையாடியது. மார்கஸ் ஸ்ரோய்னிஸிற்கு பதிலாக கமரூன் கிரீன் விளையாடினார்.
அணி விபரம்
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், கமரூன் கிரீன் , ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா
நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீடா, விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்