அவுஸ்திரேலியா அபார வெற்றி

அவுஸ்திரேலியா அபார வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி உலககிண்ணத்தொடரின் 24 ஆவது போட்டியாக இன்று (25.10) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அவுஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் இணைப்பாட்டம் சத இணைப்பாட்டத்தை தாண்டியது. இருவரும் 138 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்ததும், ஜோடி சேர்ந்த டேவிட் வோர்னர், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். மார்னஸ் லபுஷேன் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் சம இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. டேவிட் வோர்னர் சிறப்பாக துடுப்பாடி அவரது 22 ஆவது சதத்தையும், இந்த உலககிண்ணத்தொடரில் இரண்டாவது சதத்தையும் பூர்த்தி செய்தார். நெதர்லாந்து அணி இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைத் தகர்த்ததனாலும், அபாரமான களத்தடுப்பினாலும் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியிருந்தாலும் க்ளன் மக்ஸ்வெல் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயாத்திக்கொடுத்ததுடன் அவரது மூன்றாவது ஆவது சதத்தை 40 பந்துகளில் பூர்த்தி செய்து உலககிண்ணத்தில் வேகமாக அடிக்கப்பட்ட சதம் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த உலககிண்ணத்தில் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் அடித்த சத சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்திரேலியா அணி 400 ஓட்டங்களை பெறும் வாய்ப்பை 1 ஓட்டத்தால் தவற விட்டிருந்தனர்.

அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றது.

இந்த இலக்கை நெதர்லாந்து அணி துரத்தியடிப்பது கடினமானதாகும்.

நெதர்லாந்து அணியின் ஆரம்ப விக்கெட் வீழ்த்தப்பட்டவுடன் விக்கெட்கள் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. நெதர்லாந்து அணியில் எல்லோரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. அவுஸ்திரேலியா அணி அதிரடியான துடுப்பாட்டம், ஆக்ரோஷமான பந்துவீச்சு, அபாரமான களத்தடுப்பு என்பவற்றாலேயே இந்த வெற்றி கிடைத்தது. அவுஸ்திரேலியா அணி இன்று வெற்றி பெற்றிருந்தாலும் புள்ளிபட்டியலில் அதே இடத்திலேயே காணப்படும். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்பன அவர்களுக்கு இன்று சிறப்பாக அமையவில்லை. அவுஸ்திரேலியா அணியில் எல்லோரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அடம் ஷம்பா சிறப்பாக பந்துவீசி நெதர்லாந்து அணியின் முக்கியமான விக்கெட்களை தகர்த்து அவுஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொள்ள உதவினார்.

நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
விக்ரம் சிங்Run Out 252560
மக்ஸ் ஓ டொவ்ட்Bowledமிட்செல் ஸ்டார்க்060910
கொலின் அக்கர்மன்L.B.Wஜோஸ் ஹெஸல்வூட்101120
சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்பிடி – டேவிட் வோர்னர்மிற்செல் மார்ஷ்112110
பஸ் டி லீட்L.B.Wபட் கம்மின்ஸ்040710
ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 102000
தேஜா நிடமனுருபிடி – ஜோஷ் இங்கிலிஸ்மிற்செல் மார்ஷ்141820
லோகன் வன் பீக்பிடி – ஜோஷ் இங்கிலிஸ்அடம் ஷம்பா000300
ரோலோஃப் வன் டெர் மேர்வ்L.B.Wஅடம் ஷம்பா000100
ஆர்யன் டட்L.B.Wஅடம் ஷம்பா010800
போல் வன் மீகெரென் Stump – ஜோஷ் இங்கிலிஸ் அடம் ஷம்பா 0001 
உதிரிகள்  07   
ஓவர்  21விக்கெட்  10மொத்தம்90   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்04002201
ஜோஸ் ஹெஸல்வூட்06002701
பட் கம்மின்ஸ்04001401
மிற்செல் மார்ஷ்04001902
அடம் ஷம்பா03000804
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மிற்செல் மார்ஷ்பிடி – கொலின் அக்கர்மன்லோகன் வன் பீக்091520
டேவிட் வோர்னர்பிடி – ஆர்யன் டட்லோகன் வன் பீக்10493113
ஸ்டீவன் ஸ்மித்பிடி – ரோலோஃப் வன் டெர் மேர்வ்ஆர்யன் டட்716891
மார்னஸ் லபுஷேன்பிடி – ஆர்யன் டட்பஸ் ட லீடா624772
ஜோஷ் இங்லிஷ்பிடி – சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்பஸ் ட லீடா141211
க்ளன் மக்ஸ்வெல்பிடி – சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்லோகன் வன் பீக்1064498
கமரூன் கிரீன்Run Out 081110
பட் கம்மின்ஸ்  120900
மிட்செல் ஸ்டார்க்பிடி – கொலின் அக்கர்மன்லோகன் வன் பீக்000100
அடம் ஷம்பா  010100
       
உதிரிகள்  12   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்399   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஆர்யன் டட்07005901
கொலின் அக்கர்மன்04001900
லோகன் வன் பீக்10007404
போல் வன் மீகெரென்10006400
விக்ரம் சிங்04002700
ரோலோஃப் வன் டெர் மேர்வ்05004100
பஸ் ட லீடா100011502

புள்ளிப்பட்டியல்

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா05050000101.353
தென்னாபிரிக்கா05040100082.370
நியூசிலாந்து05040100081.481
அவுஸ்திரேலியா05030200061.142
பாகிஸ்தான்0502030004-0.456
ஆப்கானிஸ்தான்0502030004-1.250
இலங்கை0401030002-1.048
இங்கிலாந்து0401020002-1.248
பங்களாதேஷ்0501040002-1.253
நெதர்லாந்து0501040002-1.902

அவுஸ்திரேலியா அணி ஒரு மாற்றத்தோடு விளையாடியது. மார்கஸ் ஸ்ரோய்னிஸிற்கு பதிலாக கமரூன் கிரீன் விளையாடினார்.

அணி விபரம்

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், கமரூன் கிரீன் , ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீடா, விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version