நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது பதவியை துறக்க வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது எனவே அவர் தனது பதவியை துறக்க வேண்டுமென அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், “288 நாடாளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் நாடாளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவரது சம்பத்திற்கு ஒரு செலவு, அத்துடன், எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு ஒரு செலவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது முதுமை நிலை காரணமாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் தாம் அறிந்திருப்பதாகவும், அந்த விடயம் தொடர்பில் கரிசனைக் கொண்டிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.