யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (25.10) காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நவாலி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரம் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.
