இலங்கையை பந்தாடிய ஆப்கானிஸ்தான்

இலங்கையை பந்தாடிய ஆப்கானிஸ்தான்


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 30 ஆவது போட்டியாக பூனேயில் இன்று (30.10) நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இலங்கை அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் 2 விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பத்தும் நிசங்க மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பத்தும் நிசங்க ஆட்டமிழந்தவுடன் சதீர சமரவிக்ரம, குஷால் மென்டிஸ் ஆகியோர் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். குசல் மென்டிஸ் ஆட்டமிழந்ததுடன் சம இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு மற்றும் சிறந்த களத்தடுப்பு மூலமாகவே இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடிந்தது. இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் 8 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ், மஹீஸ் தீக்ஷண ஆகியோர் 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தனர்.

இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வேகமாகவே வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா, இப்ராஹிம் சட்ரன் ஆகியோர் 73 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஹஷ்மதுல்லா ஷஹிதி, ரஹ்மத் ஷா ஆகியோர் 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். ரஹ்மத் ஷா ஆட்டமிழந்ததுடன் ஜோடி சேர்ந்த அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோர் 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்துகொண்டது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கும் உதவினர். இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க மட்டுமே சிறப்பாக பந்துவீசியிருந்தார். இலங்கை அணியின் களத்தடுப்பாளர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர் இவர்கள் இலகுவான 6 பிடிகளை நழுவவிட்டிருந்தனர். இதுவே இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்Bowledடில்ஷான் மதுஷங்க000400
இப்ராஹிம் ஷர்டான்பிடி – திமுத் கருணாரட்னடில்ஷான் மதுஷங்க395741
ரஹ்மத் ஷாபிடி – திமுத் கருணாரட்னகஸூன் ரஜித627470
ஹஷ்மதுல்லா ஷஹிதி   5874 
அஸ்மதுல்லா ஓமர்சாய்   7363 
      
       
       
       
       
       
உதிரிகள்  10   
ஓவர்  45.2விக்கெட்  03மொத்தம்242   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுஷங்க09004802
கஸூன் ரஜித1000 48 01
அஞ்சலோ மத்தியூஸ்03001800
துஷ்மந்த சமீர9.2005100
மஹீஸ் தீக்ஷண10005500
தனஞ்சய டி சில்வா04002100
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- ரஹ்மனுல்லா குர்பாஸ்அஸ்மதுல்லா ஓமர்சாய்466050
திமுத் கருணாரட்னL.B.Wபசல்ஹக் பரூக்கி152110
குஷல் மென்டிஸ்பிடி- நஜிபுல்லா சட்ரன்முஜீப் உர் ரஹ்மான்395030
சதீர சமரவிக்ரமL.B.Wமுஜீப் உர் ரஹ்மான்364030
சரித் அசலங்கபிடி- ரஷீட் கான்பசல்ஹக் பரூக்கி222820
தனஞ்சய டி சில்வாBowledரஷீட் கான்142610
அஞ்சலோ மத்தியூஸ்பிடி- மொஹமட் நபிபசல்ஹக் பரூக்கி232611
துஷ்மந்த சமீரRun Out 010400
மஹீஸ் தீக்ஷணBowledபசல்ஹக் பரூக்கி293131
கஸூன் ரஜிதRun Out 050700
டில்ஷான் மதுஷங்க  000400
உதிரிகள்  11   
ஓவர்  49.3விக்கெட்  10மொத்தம்241   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
முஜீப் உர் ரஹ்மான்10003802
பசல்ஹக் பரூக்கி10013404
நவீன் உல் ஹக்6.3004700
அஸ்மதுல்லா ஓமர்சாய்07003701
ரஷீட் கான்10005001
மொஹமட் நபி06003300

இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் இன்று விளையாடுகிறது. குசல் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரட்னவும் லஹிரு குமார உபாதை அடைந்த காரணத்தால் அவருக்கு பதிலாக துஷ்மந்த சமீரவும் விளையாடுகினறனர். ஆப்கானிஸ்தான் அணி ஒரு மாற்றத்தோடு விளையாடுகிறது. நூர் அஹமட்டிற்கு பதிலாக பசல்ஹக் பரூக்கி மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.

அணி விபரம்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), திமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version