இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02.11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மி.மீ. 75 டிகிரிக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளை பனிமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply