யாழில் பேருந்து விபத்து – 5 பேருக்கு காயம்!

யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி நெல்லியடிப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பயணிகள் காயமடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த தனியார் பஸ் நெல்லியடி பகுதியில் வேகா கட்டுப்பாட்டை இழந்து திடீரென வீதியை விட்டு விலகி மறுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், பேருந்தின் சாரதி உட்பட நான்கு பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply