58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவியை எதிர்வரும் வாரத்தில் பங்களாதேஷிடமிருந்து பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை எதிர்வரும் காலங்களில் வழங்கவுள்ளதாவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், நாட்டில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பாக அரச மட்டத்தில் நீண்ட கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.