லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 70-90 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட விலை நாளை (04.11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாகவே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version