உலகக்கிண்ண தொடரின் 37 ஆவது போட்டி இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி இந்தியா, கொல்கொத்தா ஈடின் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்ளை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ரோஹித் ஷர்மா அதிரடி ஆரம்பம் ஒன்றை வழங்கி தென்னாபிரிக்கா பந்துவீச்சாளர்களை தடுமாற வைத்தார். இருப்பினும் ககிஷோ ரபாடாவின் பந்துவீச்சில் வேகமாகவே ஆட்டமிழந்த பின்னர் இந்தியா அணியின் தடுமாற்றம் ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் சுப்மன் கில் கேஷவ் மஹாராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தடுமாறினார். குறிப்பாக கேஷவ் மஹாராஜின் பந்துவீச்சுக்கு அடிக்க முடியாமல் தடுமாறினார்கள். ரப்ரைஸ் ஷம்ஷியும் சிறப்பாக பந்துவீச இருவரும் நிதானம் காத்து இணைப்பாட்டத்தை உருவாக்கினார்கள். மஹாராஜ் 10 ஓவர்களுக்கு 30 ஓட்டங்ளை மட்டுமே வழங்கினார்.
நிதானம் கார்த்த கோலி-ஷ்ரேயாஸ் ஜோடி வேகத்தை படிப்படியாக அதிகரித்தனர். ஷ்ரேயாஸ் அதிரடியாக துடுப்பாடிய நிலையில் ஆட்டமிழந்தார். 134 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி தென்னாபிரிக்க அணி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
நிதானமாக துடுப்பாடிய விராத் கோலி தனது 36 ஆறாவது பிறந்த நாளில் 49 ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் கூடுதலான சதங்களை பெற்றவர் என்ற சாதனையை சமன் செய்தார். சச்சின் ரெண்டுல்கார் இந்த சாதனையை பல வருடங்களாக கொண்டிருந்தார்.
இந்த இலக்கை தென்னாபிரிக்கா அணி பெறுவது இலகுவானதல்ல. ஆனாலும் அவர்களது அதிரடி துடுப்பாட்டம் சரியாக அமைந்தால் துரத்தி பிடிப்பார்கள்.
புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களை பிடித்துள்ள அணிகள் மோதுகின்ற இந்தப் போட்டி விறு விறுப்பாக அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெற்றி பெறுமணிக்கு முதலிடம் கிடைக்கவுள்ளது.
இந்தியா அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி 6 வெற்றிகளையும், 1 தோல்வியையும் பெற்றுள்ள நிலையில் காணப்டுகின்றன.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரோஹித் ஷர்மா | பிடி – ரெம்பா பவுமா | ககிஷோ ரபாடா | 40 | 24 | 6 | 2 |
சுப்மன் கில் | Bowled | கேசவ் மகராஜ் | 23 | 24 | 4 | 1 |
விராத் கோலி | 101 | 121 | 10 | 0 | ||
ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி – எய்டன் மார்க்ரம் | லுங்கி நிகிடி | 77 | 87 | 7 | 2 |
லோகேஷ் ராகுல் | பிடி – ரஷி வன் டேர் டுசென் | மார்கோ ஜென்சன் | 08 | 07 | 0 | 0 |
சூர்யகுமார் யாதவ் | பிடி – குயின்டன் டி கொக் | ரப்ரைஸ் ஷம்ஸி | 22 | 14 | 5 | 0 |
ரவீந்தர் ஜடேஜா | 29 | 15 | 3 | 1 | ||
உதிரிகள் | 26 | |||||
ஓவர் 50 | விக்கெட் 05 | மொத்தம் | 324 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
லுங்கி நிகிடி | 8.2 | 00 | 63 | 01 |
மார்கோ ஜென்சன் | 9.4 | 00 | 94 | 01 |
ககிஷோ ரபாடா | 10 | 01 | 48 | 01 |
கேசவ் மகராஜ் | 10 | 00 | 30 | 01 |
ரப்ரைஸ் ஷம்ஸி | 10 | 00 | 72 | 01 |
எய்டன் மார்க்ரம் | 02 | 00 | 17 | 00 |
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், ரப்ரைஸ் ஷம்ஸி, ககிஷோ ரபாடா