உலகக்கிண்ண தொடரின் 37 ஆவது போட்டி இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களை பிடித்துள்ள அணிகள் மோதுகின்ற இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணிக்கு முதலிடம் கிடைக்கவுள்ளது.
இந்தியா அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி 6 வெற்றிகளையும், 1 தோல்வியையும் பெற்றுள்ள நிலையில் காணப்டுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இந்தியா அணி விளையாடும் சகல அணிகளுடனும் இலகுவான வெற்றிகளைப் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் அதிரடியாக விளையாடும் தென்னாபிரிக்க அணி இந்தியா அணிக்கு சவால் வழங்குமா என பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், ரப்ரைஸ் ஷம்ஸி, ககிஷோ ரபாடா
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
இந்தியா | 07 | 07 | 00 | 00 | 14 | 2.102 |
தென்னாபிரிக்கா | 07 | 06 | 01 | 00 | 12 | 2.290 |
அவுஸ்திரேலியா | 07 | 05 | 02 | 00 | 10 | 0.924 |
நியூசிலாந்து | 08 | 04 | 04 | 00 | 08 | 0.398 |
பாகிஸ்தான் | 08 | 04 | 04 | 00 | 08 | 0.036 |
ஆப்கானிஸ்தான் | 07 | 04 | 03 | 00 | 08 | -0.330 |
இலங்கை | 07 | 02 | 04 | 00 | 04 | -1.162 |
நெதர்லாந்து | 07 | 02 | 05 | 00 | 04 | -1.398 |
பங்களாதேஷ் | 07 | 01 | 06 | 00 | 02 | -1.446 |
இங்கிலாந்து | 07 | 01 | 06 | 00 | 02 | -1.504 |