கமல் – மணிரத்னம் கூட்டணியின் புதுப் பட அறிவிப்பு வெளியானது!

மணி ரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கவுள்ள படம் கமல் 234 திரைப்படம் தொடர்பான அறிவிப்பு, இன்று மாலை வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ், ராஜ் கமல் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று (06.11) மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பெயர் ”Thug Life” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலரும் நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய அறிவிப்புகள் தொடர்பில் படகுழுவினர் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

”நாயகன்” திரைப்படத்திற்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

கமல் - மணிரத்னம் கூட்டணியின் புதுப் பட அறிவிப்பு வெளியானது!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version