ஐந்து மதுபான நிறுவனங்கள் 672 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரியை செலுத்தத் தவறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (07.11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாமதமான ஒவ்வொரு மாதத்திற்கும் 3 சதவீத வரி விதிக்கப்படுவதால், 400 கோடி ருபாய் தாமதக் கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிறுவனங்களை மூடுவதன் மூலம் வரிகளை அறவிட முடியாது எனவும், அந்த நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கு எதிர்வரும் டிசம்பர் 29ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களுக்கு ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்துவது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றும், இதனால் பெரும் வருவாய் ஈட்ட முடியும் என்பதுடன் அதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.