நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (08.11) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் எனவும், பலத்த இடி மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை பெய்யும்போது பொது மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.