காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை!

போர்நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும், காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தமது ராணுவம் வெற்றிகரமாக போரிட்டு வருவதகவும், எனவே, போர் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய தேவையோ விருப்பமோ இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிகள் தோல்விக்கு பின் சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகம் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகளை வேரறுக்கும் இஸ்ரேலின் முடிவை ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இந்த நேரத்தில் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்குச் சென்றால், தாக்குதலில் இருந்து பின்வாங்கும் ஹமாஸ் போராளிகள் மீண்டும் பலமடையலாம் என்றும் அமெரிக்கா கணித்துள்ளது.

தற்போது, ​​இஸ்ரேலியப் படைகள் காசா பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக 50,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காஸாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், மனிதாபிமான காரணங்களை கருத்தில் கொண்டு, நான்கு மணி நேரம் தாக்குதல்களை நிறுத்தவும், காசா நகரவாசிகளை நகரை விட்டு வெளியேற அனுமதிக்கவும் இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version