ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 42 ஆவது போட்டி இன்று அஹ்மதாபாத் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்கா அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளோடு இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. இன்று வெற்றி பெற்றால் இரண்டாம் இடம் உறுதியாகும். தோல்வியடைந்தால் மூன்றாமிடத்துக்கு பின் செல்லும் நிலையும் உருவாகலாம். எப்படி இருந்தாலும் அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடன் மோதுவதில் மாற்றம் வரப்போவதில்லை.
ஆப்கானிஸ்தான் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனை வெற்றி பெற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கிடைப்பது கடினமே. 10 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்து அணியின் ஓட்ட நிகர சராசரி வேகமும் ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட நிகர சராசரி வேகமும் பாரிய வித்தியாசத்தை கொண்டுள்ளது.
அணி விபரம்
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், , ககிஷோ ரபாடா, அன்டிலி பெசுவாயோ, ஜெரால்ட் கோட்ஸி