
அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 43 போட்டி இன்று (11.11) பூனேயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணி தோல்வியடைந்த போதும் ஓட்ட நிகர சராசரி வேகத்தை அதிகரித்த காரணத்தினால் எட்டாமிடத்துக்கு முன்னேறி சம்பியன் கிண்ண போட்டியில் விளையாடும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. நெதர்லாந்து அணி நாளைய தினம் இந்தியாவுடன் வெற்றி பெற்றால் அல்லது ஓட்ட நிகர சராசரி வேகத்தை அதிகரிக்க தவறினால் பங்களாதேஷ் அணி வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.
307 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்ப விக்கெட்டை வேகமாக இழந்த போதும், இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் சதத்தை கடந்தது. மிட்செல் மார்ஷ் அதிரடி நிகழ்த்தி 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டம் 175 ஓட்டங்களை வழங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி வந்தது. முதல் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த தன்ஷித் ஹசன் தமீம், லிட்டொன் தாஸ் ஆகியோர் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாகா பகிர்ந்து கொண்டனர். முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட் சம இடைவெளியில் வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த தௌஹித் ரிடோய், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் அணியின் ஓட்டஎண்ணிக்கையினையும் உயர்திக்கொடுத்தனர். 3 ஆவது விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த 3 விக்கெட்களும் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. தௌஹித் ரிடோய் அதிரடியாக துடுப்பாடி அவரது 6 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் முதலாவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார்.
பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ட்ரவிஸ் ஹெட் | Bowled | தஸ்கின் அஹமட் | 10 | 11 | 2 | 0 |
| டேவிட் வோர்னர் | பிடி – நஜ்முல் ஹொசைன் சாண்டோ | முஷ்ரபிகுர் ரஹ்மான் | 53 | 61 | 6 | 0 |
| மிற்செல் மார்ஷ் | 177 | 132 | 17 | 9 | ||
| ஸ்டீவன் ஸ்மித் | 63 | 64 | 4 | 1 | ||
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 44.4 | விக்கெட் 02 | மொத்தம் | 307 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| தஸ்கின் அஹமட் | 10 | 00 | 61 | 01 |
| மஹேதி ஹசன் | 09 | 00 | 38 | 00 |
| நசும் அஹமட் | 10 | 00 | 85 | 00 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | 06 | 00 | 47 | 00 |
| முஷ்ரபிகுர் ரஹ்மான் | 9.4 | 01 | 76 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரன்ஷித் ஹசன் தமீம் | பிடி – சீன் அபோட் | சீன் அபோட் | 36 | 34 | 6 | 0 |
| லிட்டொன் டாஸ் | பிடி – மார்னஸ் லபுஷேன் | அடம் ஷம்பா | 36 | 45 | 5 | 0 |
| நஜ்முல் ஹொசைன் சாண்டோ | Run Out | 45 | 57 | 6 | 0 | |
| தௌஹித் ரிடோய் | பிடி – மார்னஸ் லபுஷேன் | மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | 74 | 79 | 5 | 2 |
| மஹ்மதுல்லா | Run Out | 32 | 28 | 1 | 3 | |
| முஷ்பிகுர் ரஹீம் | பிடி – பட் கம்மின்ஸ் | அடம் ஷம்பா | 21 | 24 | 0 | 1 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | பிடி – பட் கம்மின்ஸ் | சீன் அபோட் | 29 | 20 | 4 | 0 |
| நசும் அஹமட் | Run Out | 07 | 11 | 0 | 0 | |
| மஹேதி ஹசன் | 02 | 03 | 0 | 0 | ||
| தஸ்கின் அஹமட் | 00 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 24 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 306 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜோஸ் ஹெஸல்வூட் | 07 | 01 | 21 | 00 |
| பட் கம்மின்ஸ் | 08 | 00 | 56 | 00 |
| சீன் அபோட் | 10 | 00 | 61 | 02 |
| மிற்செல் மார்ஷ் | 04 | 00 | 48 | 00 |
| அடம் ஷம்பா | 10 | 00 | 32 | 02 |
| ட்ரவிஸ் ஹெட் | 06 | 00 | 33 | 00 |
| மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | 05 | 00 | 45 | 01 |
அணி விபரம்
பங்காளதேஷ் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(தலைவர்), லிட்டொன் டாஸ், தௌஹித் ரிடோய் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, தஸ்கின் அஹமட், முஷ்ரபிகுர் ரஹ்மான், மஹேதி ஹசன், நசும் அஹமட்
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்ரொய்னிஸ் , ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா