வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனின் கோரிக்கையை தொடர்ந்து இலங்கை புகையிரத திணைக்களம் மதவாச்சி முதல் கனகராயன் குளம் வரை இயங்கா நிலையிலுள்ள புகையிரத கடவை சமிகஞை விளக்குகளை புனரமைக்கவும், இல்லாத இடங்களில் புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை ஒன்றை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சினால் புகையிரத திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற வவுனியா பிரேதச அபிவிருத்திக்கு குழு கூட்டத்தில் இந்த விடயம் திலீபனின் கவனத்துக்கு கொண்டுவரப்ட்டது. இதனை தொடர்நது புகையிரத திணைக்களத்துக்கும், போக்குவரத்து அமைச்சுக்கு இந்த விடயம் தொடர்பில் திலீபனால் அறிவிக்கப்பட்து.