இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 45 ஆவது போட்டியாகவும் முதல் சுற்றின் இறுதிப்போட்டியாகவும் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று (12.11) ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இந்தியா அணி விளையாடிய 8 போட்டிகளிலுமே வெற்றி பெற்று முதலாமிடத்திலும் நெதர்லாந்து அணி விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகள் 6 தோல்விகள் என்ற நிலையில் இறுதியிடத்திலும் காணப்படுகின்றன.
இந்தியா அணி ஏற்கனவே அரை இறுதிக்கு தெரிவாகிவிட்டது. நெதர்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சம்பியன் கிண்ணத்திற்கு தெரிவாகும்.
இந்தியா அணி அரை இறுதியில் நியூசிலாந்து அணியுடனும் அவுஸ்திரேலியா அணி அரை இறுதியில் தென்னாபிரிக்கா அணியுடனும் மோதவுள்ளன.
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி
நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீடா, வெஸ்லி பரசி, தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்