
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 45 ஆவது போட்டியாகவும் முதல் சுற்றின் இறுதிப்போட்டியாகவும் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று (12.11) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 160 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 410 ஓட்டங்களை பெற்றது.
இந்தியா அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்துகொண்டனர். ரோஹித் ஷர்மா அவரது 55 ஆவது அரைச்சதத்தையும், சுப்மன் கில் அவரது 12 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டனர். முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். விராத் கோலி அவரது 71 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். விராத் கோலி ஆட்டமிழந்ததுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் ஆகியோர் 208 ஓட்டங்களை அதிரடியாக துடுப்பாடி இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் இருவரும் சதங்களை பூர்த்தி செய்துகொண்டனர். லோகேஷ் ராகுல் அவரது 7 ஆவது சதத்தையும், ஷ்ரேயாஸ் ஐயர் அவரது 4 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டனர்.
411 என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடிய நெதர்லாந்து அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 2 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த மக்ஸ் ஓ டொவ்ட், கொலின் அக்கர்மன் ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். 2 ஆவது விக்கெட் வீழ்ந்தவுடன் விக்கெட்டுகள் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. விராத் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்று மேலதிகமான பந்துவீச்சாளராக பந்துவீசியிருந்தார்கள். விராத் கோலி 9 வருடங்களிற்கு பிறகு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விக்கெட்டினை கைப்பற்றிக்கொண்டார். பந்துவீச்சில் அனைவரும் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். தேஜா நிடனமரு இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி 3 ஆவது அரைச்சதத்தையும், இந்த உலகிண்ணத்தில் 1 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டனர்.
நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| வெஸ்லி பரசி | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் சிராஜ் | 04 | 05 | 0 | 0 |
| மக்ஸ் ஓ டொவ்ட் | Bowled | ரவீந்தர் ஜடேஜா | 30 | 42 | 3 | 1 |
| கொலின் அக்கர்மன் | L.B.W | குல்தீப் யாதவ் | 35 | 32 | 6 | 0 |
| சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | Bowled | மொஹமட் சிராஜ் | 45 | 80 | 4 | 0 |
| ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | பிடி- லோகேஷ் ராகுல் | விராத் கோலி | 17 | 39 | 1 | 0 |
| பஸ் டி லீட் | Bowled | ஜஸ்பிரிட் பும்ரா | 12 | 21 | 1 | 0 |
| தேஜா நிடமனுரு | பிடி- மொஹமட் ஷமி | ரோஹித் ஷர்மா | 54 | 39 | 1 | 6 |
| லோகன் வன் பீக் | Bowled | குல்தீப் யாதவ் | 16 | 15 | 2 | 0 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | பிடி- மொஹமட் ஷமி | ரவீந்தர் ஜடேஜா | 16 | 08 | 1 | 2 |
| ஆர்யன் டட் | Bowled | ஜஸ்பிரிட் பும்ரா | 05 | 11 | 0 | 0 |
| போல் வன் மீகெரென் | ||||||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 47.5 | விக்கெட் 10 | மொத்தம் | 250 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜஸ்பிரிட் பும்ரா | 09 | 01 | 33 | 02 |
| மொஹமட் சிராஜ் | 06 | 01 | 29 | 02 |
| மொஹமட் ஷமி | 06 | 00 | 41 | 00 |
| குல்தீப் யாதவ் | 10 | 01 | 41 | 02 |
| ரவீந்தர் ஜடேஜா | 09 | 00 | 49 | 02 |
| விராத் கோலி | 03 | 00 | 13 | 01 |
| சுப்மன் கில் | 02 | 00 | 11 | 00 |
| சூர்யகுமார் யாதவ் | 02 | 00 | 17 | 00 |
| ரோஹித் ஷர்மா | 0.5 | 00 | 07 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரோஹித் ஷர்மா | பிடி – வெஸ்லி பரசி | பஸ் ட லீடா | 61 | 54 | 8 | 2 |
| சுப்மன் கில் | பிடி – தேஜா நிடமனுரு | போல் வன் மீகெரென் | 51 | 32 | 3 | 4 |
| விராத் கோலி | Bowled | ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 51 | 56 | 5 | 1 |
| ஷ்ரேயாஸ் ஐயர் | 128 | 94 | 10 | 5 | ||
| லோகேஷ் ராகுல் | பிடி – சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | பஸ் ட லீடா | 102 | 64 | 11 | 4 |
| சூர்யகுமார் யாதவ் | 02 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 04 | மொத்தம் | 410 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஆர்யன் டட் | 07 | 00 | 52 | 00 |
| லோகன் வன் பீக் | 10 | 00 | 107 | 00 |
| கொலின் அக்கர்மன் | 03 | 00 | 25 | 00 |
| போல் வன் மீகெரென் | 10 | 00 | 90 | 01 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 10 | 00 | 53 | 01 |
| பஸ் ட லீடா | 10 | 00 | 82 | 02 |
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி
நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீடா, வெஸ்லி பரசி, தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்