பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆறு மாவட்டங்களில் உள்ள 36 பிராந்திய செயலகங்களுக்கு இன்று (13.11) மாலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புத்தளை, கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர உடுநுவர மற்றும் உடதும்பர பிரதேச செயலக பிரிவுகளுக்கும், தும்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, வரக்காபொல, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாலிம்பட சாரஸ்ஸ, கொட்டாபொல பிடபெத்தர, ஹக்லிபிட்டிய மாவட்டத்தின் கம்புருபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல, கஹவத்த, அயகம, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை அறிவிப்பும் இரத்தினபுரி, அஹெலியகொட, கொலன்னா மற்றும் பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version