இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தனியார் பஸ் தொழிற்சங்கத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தனியார் பஸ் சங்கங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இவ்வருட வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் குத்தகை வட்டி குறைப்பு, பஸ்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி, எரிபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணங்களை பஸ் தொழிற்சங்கங்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் பஸ் தொழிற்துறைக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்ட யோசனையின் பின்னர் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.