ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒப்பந்தம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்- தேசபந்து தென்னகோன்

ஸ்ரீலங்கா கிரிக்கட், சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை வழங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாக செய்தியை தேசபந்து தென்னகோன் மறுத்துள்ளார். அவ்வாறு அந்த ஒப்பந்தம் நிரூபிக்கப்பட்டால் தான் தற்போது வகிக்கும் பதிவியிலிருந்து விலகுவேன் என மேலும் கூறியுள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக 150,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு, மாதம் 200 லீட்டர் எரிபொருள், 5000 ரூபா மாதாந்த தொலைபேசி கொடுப்பனவு, மடி கணினி, மருத்துவ காப்புறுதி என்பன வழங்கப்பட்டதாக வெளியாகிய ஆவணத்தில் காணப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 07 திகதி முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டதாக ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் தனக்கு வழங்கப்பட்ட போதும், தான் அரசியலமைப்பு சட்டத்தக்கு அமைய அதனை மறுத்ததாகவும், அதனை தான் அப்போதைய பொது பாதுக்காப்பு அமைச்சுக்கு எழுத்து மூலமாக அறிவித்ததாகவும், அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமென அமைச்சின் செயலாளர் ஜெகத் அல்விஸ் ஆலோசனை வழங்கியதாவும் “இதனை ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் தனக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துமென ஆலோசனை வழங்கினார்” எனவும் டெய்லி மிரர் ஊடகத்துக்கு தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மட்டுமன்றி மேலும் பல நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக மேலும் அவர் கூறியுளளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒப்பந்தம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்- தேசபந்து தென்னகோன்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version