ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(13.11) பாராளுமன்றத்தில் முன் மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு மீள் குடியேற்ற தேவைகளுக்காகவும், வீடுகளை அமைப்பதற்காகவும் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபப்ட்டுள்ளது.
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு முரண்பாடுகள் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அந்தப் பிரதேசங்களில் இன்னும் வீடற்ற குடும்பங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இவர்களின் மீள்குடியேற்ற தேவைகளை நிவர்த்தி செய்ய ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மேலதிக நிதி ஒதுக்கீடாக வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தவும், மீதமுள்ள வீடற்ற குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்கவும் ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட உரையில் முன் மொழிந்துள்ளார்.
“உள்ளக மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போன 181 நபர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் 170 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட இழப்பீட்டுக் கோரிக்கைகளில், 6,300 நிகழ்வுகளுக்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளதுடன் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் இருந்து ஏற்கனவே ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்த ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்” ஜனாதிபதி தனது உரையில் கூறியுளளார்.
யாழ்ப்பாண பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினை பல வருடங்களாக தீர்க்கப்படாதிருப்பதுடன் வெற்றிகரமான கருத்திட்டமெதுவும் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. தற்பொழுது காணப்படும் சிக்கலான பல்வகை நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றாக ஏற்கனவே சாத்தியவள ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ள பாலி ஆறு நீர் கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இக்கருத்திட்டத்தின் ஆரம்ப வேலைகளை 2024 இன் முதல் அரை ஆண்டில் ஆரம்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப வேலைகளுக்கு 2024 வருடத்தில் ரூபா 250 மில்லியனை செலவிடுவதற்கு முன் மொழியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மேலும் இரு முக்கிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது உரையில் கீழ் கண்டவாறு தெரிவித்துளளார்.
யாழ்ப்பாண நீர்வழங்கல் கருத்திட்டம்
யாழ்ப்பாண பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினை பல வருடங்களாக தீர்க்கப்படாதிருப்பதுடன் வெற்றிகரமான கருத்திட்டமெதுவும் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. தற்பொழுது காணப்படும் சிக்கலான பல்வகை நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றாக ஏற்கனவே சாத்தியவள ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ள பாலி ஆறு நீர் கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இக்கருத்திட்டத்தின் ஆரம்ப வேலைகளை 2024 இன் முதல் அரை ஆண்டில் ஆரம்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப வேலைகளுக்கு 2024 வருடத்தில் ரூபா 250 மில்லியனை செலவிடுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
பூனகரி நகர அபிவிருத்தி
யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள பூனகரி நகரம் சுற்றுலாத் துறைக்கு ஒரு முக்கிய நகரமாக அமைந்துள்ளது. இதன் அபிவருத்திக்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.