ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் வெண்கலப் பதக்கம் மட்டக்களப்பிற்கு…

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுபிகரித்த பஞ்சாட்சரம் ஜெயக்குமாருக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (17.11) இடம் பெற்றது. மாவட்ட செயலகத்தில் மாவட்ட விளையாட்டு பயிற்றுனராக கடமையாற்றும் பஞ்சாட்சரம் ஜெயக்குமார் மெய்வல்லுனர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நியுகிலார்க் சிற்றி நகரில் 22வது தடவையாக இடம் பெற்ற ஆசிய மெய்வல்லுனர் (Asia Master Athletics Championship) போட்டியில் 55 வயது முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கான கோல் ஊன்றிப்பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று எமது நாட்டுக்கு, மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் 2.3மீட்டர் உயரத்தில் பாய்ந்து வெற்றிப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். நீளம் பாய்தல், கோல் ஊன்றி பாய்தல், 100 மீற்றர் ஓட்டப் போட்டி என தள கள விளையாட்டுக்களில் தனது திறமையை வெளிக்காட்டி வருவதுடன் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கு இவர் மட்டுமே சென்றமை பங்கேற்றுள்ளார்.

இலங்கையில் இருந்து 147 வீர வீராங்கனைகள் பங்கு பற்றியதில் 84 பதக்கங்களை தனதாக்கி கொண்டமை சிறப்பம்சமாகும்.

25 பேர் தங்கப்பதக்கத்தையும் மற்றும் 34 பேர் வெள்ளிப்பதக்கத்தையும், 25 பேர் வெண்கலப்பதக்கத்தையும் வெற்றி பெற்று இலங்கை அணியானது 8 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிகழ்வில் இவர் போட்டியில் தான் பெற்றுக்கொண்ட அனுபவம் தொடர்பாகவும், மாவட்டத்தில் கோல் ஊன்றிப் பாய்தலை இளைஞர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக தான் தயாராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் பசிர், உதவி மாவட்ட செயலாளர் ஆ நவேஸ்வரன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட செயலக கணக்காளர் வினோத் , மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன், நிருவாக உத்தியோகத்தர் மதிவண்ணன் மற்றும் இவரின் குடும்பத்தினர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியா முதல் இடத்தினையும் யப்பான் இரண்டாம் இடத்தினையும் பிலிப்பைன்ஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுகொண்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version