ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிய கிரிக்கெட் சம்மேளன தலைவரும், இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷா உடன் நேற்று(16.11) ஸ்ரீலங்கா கிரிக்கெட் சர்ச்சைகள் தொடர்பில் தொலைபேசியில் பேசியதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று இந்த பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மட்டுமல்ல இராஜதந்திர பிரச்சினையாக மாறியுயுள்ளது. ஜய் ஷா, இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன். அமித் ஷா இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் வலது கை என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துளளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக முறையில் மாற்றம் தேவை. அதனை செய்ய வேண்டும். விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க செய்ய முயல்வது சரி. ஆனால் அதற்கு பாரளுமன்றத்தின் ஊடக செய்ய முடியாது. நீதிமன்றத்தின் ஊடாகவே செய்ய வேண்டுமென மேலும் கூறியுள்ளார். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தடை காரணமாக புல்லு வெட்டும் நபர்கள், நீர் ஊற்றும் நபர்கள் அடங்கலாக கிரிக்கெட் வீரர்கள் உள்ளடங்க பலருக்கு சம்பளம் வழங்க முடியாத ன் நிலை ஏற்பட்டுளதாகவும் தெரிவித்தார். 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண தொடருக்கு 800 பேரளவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும், இல்லாமல் போனால் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுமெனவும் தெரிவித்த ஹரின், எதிர்க்கட்சி இதனை அரசியலாக்கி தனிப்பட்ட அரசியலுக்காக பாவிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி இந்த வியடங்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவிடம் பொறுப்பை வழங்கியுள்ளார். விளையாட்டு அமைச்சர், செயலாளர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் உட்பட சகலருடனும் பேசி வருகிறோம். சர்வதேசக் கிரிக்கட் பேரவையுடன் பேசி எவ்வாறு தடையை நீக்கி 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண தொடரை நடாத்த பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயற்படவேண்டுமென வலுசக்தி அமைச்சரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரத்துக்கான அமைச்சரவை உப குழுவின் தலைவருமான காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக்க முயலவேண்டாமெனவும், தனி நபர்கள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை மற்றும் ஏனைய நாட்டை சேர்ந்தவர்கள் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் கவலை வெளியிடுவதாக மேலும் காஞ்சனா விஜயசேகர தெரிவித்துள்ளார்.