டிசம்பர் முதல் RM Parks இலங்கையில்!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks இலங்கையில் அடுத்த மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் RM Parks, தமது புதிய செயற்திட்டத்திற்கான ஆரம்ப கட்டணத்தை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆரம்பத்தில் 150 எரிபொருள் நிலையங்களை இயக்கும் எனவும், புதிய பெட்ரோல் கிடங்குகளை கட்டுவதற்கும் இலங்கையில் இயங்குவதற்கும் அனுமதியை பெற்றுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனமும் விரைவில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version