தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.