2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் தமிழ் குறும்பட விழா போட்டிக்கு, தமிழ் குறும்படங்கள் வரவேற்கப்படுகிறது. அமீரக குறுநாடக குழுவினரின் வெற்றிகரமான பத்தாவது நிகழ்ச்சி ஆகும். கொரோனா பீதி காரணமாக தொடங்கப்பட்டு, கடந்த இரு வருடங்களாக நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் கட்டமாக, குறும்படங்களின் கதை வசனம் மட்டும் பெற இறுதி நாள், வரும் டிசம்பர் 15 ம் திகதி ஆகும்.
12 நபர்கள் மட்டுமே கொண்ட குழுவினரால், 12 நிமிடங்களுக்கு உட்பட்ட தங்களது குறும்படத்திற்கான கதை வசனத்தை எழுத்தாளர் {ஆ} இயக்குனர்கள் மேற்கண்ட தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவராக வரப்போகும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் மட்டுமே குறும்படமாய் உருவாக்கப்பட்டு அமீரக திரையரங்கில் வெளியிடப்படும்.
இயக்குனரும் நடிகர்களும் அமீரகவாசிகளாகவும், இந்த நிகழ்ச்சிக்கென சுயமாய் சுவாரசியமாய் எழுதிய கதைகளாகவும், உருவாகப்போகும் குறும்படம் அமீரகத்திலேயே இதற்கென ஒளிப்பதிவு செய்ததாகவும் இருக்கவேண்டும் என்பதும் முக்கிய வரையறைகள்.
ஆர்வமிக்க அமீரக தமிழர்களின் இயக்கும் திறனை ஊக்குவிக்கும் ஒரு களமாக அமீரக தமிழ் குறும்பட விழா இருக்கிறது எனவும், மேலும் விவரங்களுக்கு 050 3920387 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விழா அமைப்பாளர்களில் ஒருவரான ரமா மலர் தெரிவித்தார்.