சந்தையில் விற்பனை செய்யப்படும் மாம்பழம் உள்ளிட்ட பல பழங்களை பழுக்க வைக்க ரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தையில் காணக்கிடைக்கும் பல பழக்கடைகளில் இந்த நிலை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பழங்களை கொள்வனவு செய்யும்போது அவதானமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.