ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமைவாகவே சர்வதேசக் கிரிக்கெட் பேரவை தடை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் நேற்று(19.11) பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்திய அதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஷம்மி சில்வா சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பிய கடிதத்தையும் பாரளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
குறித்த குற்றச்ச்சாட்டை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுத்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசக் கிரிக்கெட் பெரவைக்கு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் அனுப்பிய கடிதத்தின் விடயங்களை பிழையாக விளங்கிக்கொண்டுள்ளதோடு, பிழையாக சித்தரிக்க முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடக எதிர்கொள்ளும் சிக்கல் மற்றும் பிரச்சினைகளை அவர்களுக்கு அறிவிக்க வேணடுமெனவும், அது கடமையெனவும் அதன் பிராகரமே தெரிவிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அத்தோடு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதிவேற்ற காலம் முதல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தினுள் தலையிடுவதாகவும், தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் அவற்றையே சரத்தேசக் கிரிக்கட் பேரவைக்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை விமர்சிக்க முனைபவர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் புத்திசாலித்தனமாக ஆராய்ந்து பார்க்குமாறும், விளையாட்டு அமைப்புகள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை போன்ற அமைப்புகளுடன் எவ்வாறு செயற்படுகின்ற என அறிந்து கொள்ளாதவர்களும் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.