இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை இழந்த சோகத்தை தாங்க முடியாமல், இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோதி குமார் யாதேவ் என்ற 35 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருப்பதி துர்கா சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, கணினி மென்பொருள் பொறியாளரான அவர், கிரிக்கெட் உலக கிண்ண இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, மயக்கப்படந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.