”இறுதி போட்டிக்கு என்னை அழைக்கவில்லை” – கபில் தேவ்

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் காண அழைக்கப்படாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய ஊடகங்களுக்கு கருது தெரிவித்த அவர், ”என்னை யாரும் அழைக்கவில்லை. அமைப்பாளர்கள் என்னை மறந்து விட்டனர்’ என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான இறுதிப் போட்டியைக் காண பல இந்திய பாலிவுட் நட்சத்திரங்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் தம்மை மறந்தது ஏன் என அவர் எழுப்பியுள்ளார்.

1983-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல, மாபெரும் தூணாக இருந்த கபில்தேவை மறந்துவிட்டு, ”1983” எனும் திரைப்படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்த ரன்வீர் சிங் அழைக்கப்பட்டிருப்பது நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்புவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply