”ஜனாதிபதியின் உரை நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு தொடர்பான வழக்கு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட நீதிபதி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து பேசினார் என்றும், அவர் உரையாற்றும் போதே ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நீதிமன்ற விசாரணையில் குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுவதாகவும் இது ஒரு பாரிய பிரச்சினையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துமாறும், இது கனம் நீதிபதியையும்,
நீதிமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் பெரும் சிக்கலுக்கு உள்ளாக்குவதான செயல் என்றும், இது தொடர்பில் முறையான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23.11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version