தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று காருடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது.
கலனிகம பகுதியில் இன்று (23.11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தும் காரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, இதில் மூவர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் கலனிகம போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த குறித்த கார் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து காரின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பஸ் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.