சந்தேகநபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிளை காணவில்லை!

கைவிலங்கிலிருந்து தப்பி ஓட முயன்ற சந்தேக நபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கால்வாயில் குதித்து காணாமல் போயுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜாஎல காவல்துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி திரடபன் (99033) என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைவிலங்கிடப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் குறித்த சந்தேக நபர் தப்பிக்க முயன்று இவ்வாறு கால்வாயில் குதித்துள்ளார்.

சந்தேக நபரை பிடிக்க சென்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் நடவடிக்கைகள் கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply